இந்தியா முழுவதும் கொரோனா மீண்டும் பரவல் அதிகமாக உள்ளது,தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் நேற்று முதல் கட்டாயம் முக கவசம் அணிய கேரளா அரசு பொது மக்களை வலியுறுத்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்க குமார் சித்த மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்,இதன் நிலவேம்பு குடீநீர், கபசூரக் குடீநீர் மற்றும் மூட்டு வலி,சளி, காய்ச்சல். இருமல் மற்றும் குழந்தைகளுக்கு, கர்ப்பிணி பெண்களுக்கு சித்த மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.மேலும் ஆனைமலை சுற்று வட்டார பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வீடுகளுக்கு நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பேரூராட்சித் தலைவர் தெரிவித்தார். இதில் சித்த மருத்துவர் பிரியதர்ஷினி மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதை அடுத்து ஆனைமலை பேரூராட்சி சார்பில் நூலக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.