ஆனைமலை புலிகள் காப்பக பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகம் ஆகும்,ஆழியார் சோதனை சாவடியில் இருந்து அட்டகட்டி வரை வரையாடுகள் அதிகமாக காணப்படும்,கேரள மாநிலம் மூணாறு ராஜமலை தனியார்க்கு சொந்தமான எஸ்டேட் பகுதிகளில் கேரளா வனத்துறையினர் இந்த வரையாடுகளை பாதுகாத்து வருகின்றனர்,கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் வரையாடுகளை பாதுகாக்கும் விதமாக ரூ எட்டு கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, வால்பாறை சாலையில் உள்ள ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவு பகுதிகளில் வரையாடுகள் அதிக நடமாடும் பகுதியாகும்,வனத்துறையினர் அப்பகுதியில் வேட்டை தடுப்பு காவலர்களை நியமித்து சுற்றுலாப் பயணிகள் வரையாடுகள் அருகில் செல்லாத வாரும் துன்புறுத்தினால் கடும் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்,இந்நிலையில் சாலையில் குட்டியுடன் காலில் அடிபட்ட நிலையில் வரையாடு சாலையில் உலா வருகிறது,இதை மீட்டு சிகிச்சை அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்,மேலும் ஒன்பதாவது காட்சி முனை பழுதடைந்துள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர் இதனால் சாலையில் உலா வரும் வரையாடுகள் சுற்றுலா பயணிகள் வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.