கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித பெற்ற மாசாணி அம்மன் கோவில் உள்ளது. கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு ஆண்டுதோறும் தை அமாவாசையை ஒட்டி நடைபெறும் குண்டம் திருவிழா பிரசித்தி பெற்றது. இதில் கோவை மட்டுமின்றி வெளியூர் வெளிநாட்டு மக்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டத்தில் இறங்குவார்கள்.
இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று முதல் தொடங்குவதை ஒட்டி இதற்காக நேற்று முன்தினம் சர்க்கார்பதி வனப்பகுதியில் இருந்து 85 அடி உயரம் உள்ள மூங்கில் கொடிக்கம்பம் கொண்டு வரப்பட்டது இதனைத் தொடர்ந்து இன்று காலையில் ஆழியார் ஆற்றங்கரையில் கொடி கம்பத்துக்கு மஞ்சள் குங்குமம் பூசி புடவை உடுத்தி மலர்களால்
அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு மாசாணி அம்மன் கோவில் நற்பணி மன்ற பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கொடி கம்பத்தை தோளில் சுமந்தபடி முக்கிய வீதிகள் வழியாக கொடி மரம் வலம் வந்து ராஜகோபுரம் அருகே காலை 8 மணி அளவில் மாசாணி தாயே போற்றி என்ற பக்தர்கள் கோஷத்துடன் கொடிக்கம்பம் நடப்பட்டது இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் இதனை அடுத்து வரும் பிப்ரவரி மூன்றாம் தேதி இரவு ஒரு மணி அளவில் மயான பூஜையும் ஆறாம் தேதி காலை குண்டம் இறங்கும் நிகழ்வும் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.