ஆனைமலை புலிகள் காப்பகம் யானைகள் வளர்ப்பு முகாமில் உற்சாகத்துடன் இருக்கும் வளர்ப்பு யானைகள். பொள்ளாச்சி-ஜுன்-10 ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாம் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானது, இங்கு 26 யானைகள் வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது,காட்டு யானைகளை அடக்கும் கும்கிகள் சின்னத்தம்பி, அரிசி ராஜா என்கிற முத்து உள்ளது,யானைகளின் அரசன் கூறப்படும் கும்கி கலீம் தற்போது ஓய்வு பெற்றுள்ளது,தற்போது மேற்கு தொடர்ச்சி
மலைகளில் மழை பெய்து உள்ளதால் யானைகள் வளர்ப்பு முகாமில் உள்ள மாயாற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது,யானைகளை பராமரிக்கும் மாவுத், காவடிகள் மூலம் வளர்ப்பு யானை பராமரிக்கப்படுகிறது, டாப்ஸ்லிப் வரும் சுற்றுலா பயணிகள் வனத்துறை வாகனம் மூலம் யானைகள் வளர்ப்பு முகமுக்கு அழைத்துச் செல்கின்றனர், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.