கோவை, ஆனைமலை ஆர்ஷா வித்யா பீடம் மற்றும் ஊர் பொதுமக்கள் மற்றும் சிவனடியார்கள் இணைந்து ஆனைமலை ஆழியார் ஆற்றங்கரையில் ஆழியார் மற்றும் உப்பாரு சங்கமிக்கும் இடத்தில் சிவனடியார்கள் நதி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆராத்தி பெருவிழா நடைபெற்றது இதில் ஏராளமான சிவனடியார்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர் முதல் முறையாக ஆழியார் ஆற்றுக்கு தீபாராதனை நடைபெற்றது இப்பகுதியில் மக்களுடைய ஆச்சரியத்தை ஏற்பட்டது இந்துசமய அறநிலையத்துறை உயர்நிலைக் குழு
உறுப்பினர்சாந்தலிங்க மருதாசல அடிகளார், கோவை நான்காவது குருமகா சந்நிதானங்கள் சிரவை ஆதீனம் கௌமாரமடம் இராமானந்த குமர குருபர சுவாமிகள், . அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் நிறுவனர்
பூஜயஸ்ரீ ததேவானந்த சரஸ்வதி சுவாமிகள், ஆனைமலைஆர்ஷய வித்யா பீடம் ஸ்ரீமத் சுவாமி தபவேனந்தா, ஸ்ரீ வாகீசர் மடாலயம் – அவிநாசி ஆதீனம் காமாட்சி தாச சுவாமிகள் உள்ளிட்ட பல்வேறு ஆதினங்கள், குருமார்கள், ஆனைமலை மாசாணியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.