கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களே எதிர்ப்பை பொருட்படுத்தாமல் அம்ரூத் 2.0 திட்டத்தை நிறைவேற்றுவதில் மும்முரமாக ஈடுபட்டது மேலும் திட்டம் குறித்து பொதுமக்களிடம் விளக்கம் அளிக்க தயாராக உள்ளதாகதெரிவித்தனர்.ஆனால் பொதுமக்கள் திட்டத்தை கைவிட தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர் இதையடுத்து கடந்த சனிக்கிழமை அன்று பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பொழுது திமுக தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் மாவட்ட பொதுமக்களிடம் ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர். ஆனால் திமுக மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் உறுதியளித்தபடி மாவட்ட ஆட்சித் தலைமை
பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படாததால் கோபமடைந்த பொதுமக்கள் மீண்டும் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடந்த முற்றுகை போராட்டத்தில் ஆனைமலை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதிகாரிகளோ பேரூராட்சி தலைவர் யாரும் வராததால் ஆத்திரம் அடைந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொள்ளாச்சி சேத்துமடை சாலையில் தற்போது சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.