கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாருக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக யானை சவாரி நடத்தப்படுகிறது. இதற்காக அடிமாலி பகுதியில் 57 வயதான பாலகிருஷ்ணன் என்பவர் யானையை பராமரித்து வந்தார்.
சுற்றுலா பயணிகள் கூடியிருந்த வேளையில் கட்டளையை பின்பற்ற பாகன், யானையை பிரம்பால் தொடர்ந்து தாக்கியுள்ளார். இதனால் ஆவேசமடைந்த யானை, பாகன் பாலகிருஷ்ணனை மிதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
யானையை விரட்ட முயன்ற மற்றொரு பாகனையும் யானை தாக்க முயன்றது. அவர் தப்பிய நிலையில், பின்னர் யானை கட்டுப்படுத்தப்பட்டு பாலகிருஷ்ணனின் உடல் மீட்கப்பட்டது.