Skip to content
Home » பல் பிடுங்கல்….. ஐஏஎஸ் அதிகாரி அமுதா விசாரணை தொடங்கினார்

பல் பிடுங்கல்….. ஐஏஎஸ் அதிகாரி அமுதா விசாரணை தொடங்கினார்

  • by Senthil
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர்சிங், விசாரணை கைதிகளில் பற்களை பிடுங்கியதாக எழுந்த புகாரைத்தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  இவருக்கு உடந்தையாக இருந்த இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐ, போலீசார் ஆகியோரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

இது தொடர்பாக சேரன்மாதேவி உதவி கலெக்டர்  விசாரணை நடத்தி வந்த நிலையில், பின்னர்  விசாரணை அதிகாரியாக சீனியர் ஐஏஎஸ் அதிகாரியும், ஊரக வளர்ச்சித்துறை  முதன்மை செயலாளருமான அமுதா நியமிக்கப்பட்டார். அவர் இது குறித்து விசாரணை நடத்தி 1 மாதத்தில் அரசுக்கு அறிக்கை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரி அமுதா இன்று  அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்தில் விசாரணையை தொடங்கினார். இதற்காக தாலுகா அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்டவர்கள்  நேரில் வந்து   தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே புகார் அளித்தவர்கள் கூடுதல் தகவல் அளிக்க விரும்பினாலும் அளிக்கலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நேரில் சந்தித்து புகார் தெரிவிக்க முடியாவிட்டால் ambai.inquiry@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு புகார் அனுப்பலாம் என்றும், 8248887233 ஆகிய எண்ணிலும் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்க  நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!