தமிழ்நாட்டில் 11 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் பி. அமுதா பிறப்பித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:
காவல்துறை கூடுதல் இயக்குனர் டி. கல்பனா நாயக்( பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு), சீருடை பணியாளர் தேர்வு வாரிய கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டார்.
விடுமுறையில் இருந்த கூடுதல் டிஜிபி மகேஸ்வர்தயாள், சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்படுகிறார்.
சிறைத்துறை டிஜிபியாக இருந்த அம்ரேஷ் புஜாரி— கரூர் காகித ஆலை தலைமை ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே இந்த பதவியில் இருந்த ஐஜி பிரமோத் குமார், டான்ஜெட்கோ ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் தமிழ்சந்திரன்(ஐஜி) பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு ரிவு ஐஜியாக நியமிக்கப்படுகிறார்.
விடுப்பில் இருந்த டிஐஜி ஜி தர்மராஜன், சென்னைபெருநகர(கிழக்கு) சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கடலோர காவல்படை எஸ்.பி. சந்திரசேகரன, கோவை மண்டல சிவில் சப்ளைஸ் எஸ்.பியாக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே இந்த பதவியில் இருந்த பி. பாலாஜி, மதுரை மாநகர காவல் துணை ஆணையராக நியமிக்கப்படுகிறார்.
மதுரை மாநகர துணை கமிஷனர் பிரதீப், திண்டுக்கல் எஸ்.பியாக நிமிக்கப்படுகிறார். ஏற்கனவே திண்டுக்கல் எஸ்.பியாக இருந்த பாஸ்கரன், சென்னை பெருநகர போலீஸ் துணை கமிஷனரைாக( போக்குவரத்து) நியமிக்கப்படுகிறார்.
ஏற்கனவே போக்குவரத்து துணை கமிஷனராக இருந்த சமய் சிங் மீனா, கள்ளக்குறிச்சி எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.