மிக்ஜம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. நேற்று இரவு 10 மணி முதல் விடாமல் மழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக அம்பத்தூர் தொழில் பேட்டைக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால் இன்று அந்த தொழில் பேட்டையில் பணிகள் நடைபெறவில்லை. சென்னை பழவேற்காட்டில் கரையோரம் நிறுத்திவைத்திருந்த பல நாட்டுப்படகுகள் கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்டன. மீனவர்கள் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களில் படகுகளை நிறுத்தி வைத்திருந்தனர். ஆனால் இன்று அதிகாலை கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் அலைகள் மேலும் சீற்றத்துடன் எல்லையை தாண்டி வந்து படகுகளை அடித்து சென்றன.
இன்று காலை 6 மணிக்கு கிடைத்த தகவல்படி சென்னையில் முக்கிய இடங்களில் பெய்த மழை அளவு(சென்டிமீட்டரில்) வருமாறு:
பெருங்குடி 27, மீனம்பாக்கம் 23, வளசரவாக்கம் 20, புதுல் 21, நுங்கம்பாக்கம், மதுரவாயல் 19, கோடம்பாக்கம் 18, அடையாறு 16,