கரூர் மாவட்டம் லாலாபேட்டை பகுதிகளில் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஆம்னி காரினை நிறுத்தி சோதனையிட்டபோது காரினுள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
என்னைய எடுத்து காரில் இருந்தா 30 கிலோ ஹான்ஸ் பாக்கெட்டுகள், 5.940 கிலோகிராம் கூல் லிப், 5.500 கிலோ கிராம் எடையுள்ள விமல் பான் மசாலா பாக்கெட்டுகள் ஆகியவற்றினை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடத்தியதாக சத்தியமங்கலத்தைச் சேர்ந்த பாரதிராஜா மற்றும் ஆம்னி காரினை ஓட்டி வந்த மேலகுட்டப்பட்டியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் ஆகிய இருவரையும் லாலாப்பேட்டை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்.