திருச்சி மாநகரில் கடந்த 25.09.2019-ந்தேதி எடமலைப்பட்டிபுதூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ராம்ஜிநகர், மில்காலனியில் ஒரு வீட்டில் குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டின் மாடியில் உள்ள அறையில் கட்டிலில் அம்மாவின் தலையை மோதியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்துவிட்டு, கொலையை மறைக்க முயன்ற மகன் குமரவேல் 32/23 த.பெ.ஹரிதாஸ் என்பவரின் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு, வழக்கில் குமரவேலுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்..
இவ்வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு, கடந்த 29.02.20-ந்தேதி குமரவேல் மீது குற்றப்பத்திரிக்கையை புலன் விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள். மேற்படி வழக்கில் திருச்சி மாவட்ட 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தங்கவேல் நீதிமன்ற விசாரணையை முடித்து, இன்று 04.09.2023-ம்தேதி குமரவேலுக்கு ச/பி 302 IPC ன்படி ஆயுள் தண்டனையும், ச/பி 201 IPC ன்படி 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் மற்றும் அபராதம் ரூ.5000/-ம், அபராதம் கட்ட தவறினால் ஒரு மாத சிறை தண்டனையும் விதித்தும், சிறை தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்கள். இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆனந்தன் ஆஜராகி அரசு சார்பாக வாதாடினார்கள்.
இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த கண்டோன்மெண்ட் காவல் உதவி ஆணையர் கென்னடி, வழக்கு பதிவு செய்து புலன்விசாரணை செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த காவல் ஆய்வாளர் நிக்சன், சாட்சிகளை குறித்த காலத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்செய்த எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கர் மற்றும் காவல் ஆய்வாளர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி வெகுவாக பாரட்டினார்.