லோக்சபா தேர்தலின் ஓட்டுகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் விஐபி வேட்பாளராக கருதப்படும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளனர். அந்த வகையில் இந்தியாவிலேயே அதிகபட்சமாக அமித்ஷா 7.44 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றார். காந்திநகர் தொகுதியில் அவர் 10,10,972 ஓட்டுகளை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரசின் சோனல் ராமன்பாய் படேல் 2.66 லட்சம் ஓட்டுகளையே பெற்றார். இதன்மூலம் 7.44 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அமித்ஷா அபார வெற்றிப்பெற்றார். இவர் கடந்த 2019 லோக்சபா தொகுதியில் இதே தொகுதியில் 5.57 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருந்தார்.