சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்கும் விழா இன்று அந்திர மைாநிலம் விஜயவாடா அருிகல் உள்ள கேசரபள்ளி என்ற இடத்தில் நடந்தது. விழா மேடையில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, அமித்ஷா, ஜே.பி. நட்டா ஆகியோர் அமர்ந்தி்ருந்தனர். அப்போது விழாவில் கலந்து கொள்ள தமிழிசை வந்தார். அவர் மேடையில் இருந்த வெங்கய்யா நாயுடுவுக்கு வணக்கம் செலுத்தினார். அதை அவர் பொருட்படுத்தாமல், இடது கையை ஆட்டினார்.
அடுத்ததாக அமி்த்ஷாவுக்கு வணக்கம் செலுத்திவிட்டு நகர்ந்தார். அவரை அழைத்த அமித்ஷா கோபமாக ஏதோ கூறினார். அதை தமிழிசை மறுத்து விளக்கம் சொல்ல முயன்றார். ஆனால் அவர் அதை ஏற்காமல், மீண்டும் தனது கருத்தை வலியுறுத்தி, இனி அப்படி செய்யக்கூடாது என்ற தொனியில் ஏதோ கண்டிப்புடன் கூறினார். இதைப்பார்த்த வெங்கையா நாயுடுவும் அதிர்ச்சியில் உறைந்து காணப்பட்டார். அதன்பிறகு தமிழிசை சற்று வாடிய முகத்துடன் அங்கிருந்து நகர்ந்தார். இதனால் விழா மேடையில் இதைப்பற்றியே பேசப்பட்டது.
இந்த விழாவில் பிரதமர் மோடி, ஓபிஎஸ், நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி , பாலகிருஷ்ணா ஆகியோரும் பங்கேற்றனர். பிரதமர் மோடி மேடைக்கு வருவதற்கு 5 நிமிடத்திற்கு முன்னதாக தமிழிசைக்கு டோஷ் விட்ட இந்த சம்பவம் நடந்தது.