முன்னாள் கவர்னர் தமிழிசையின் தந்தை குமரி அனந்தன் கடந்த 9ம் தேதி காலமானார். அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடந்தது. இந்த நிலையில் சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கிண்டியில் உள்ள ஓட்டலில் தங்கி உள்ளார். அவர் இன்று காலை 10.30 மணிக்கு சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை இல்லத்துக்கு புறப்பட்டு சென்றார்.10.55 மணிக்கு தமிழிசை வீட்டுக்கு வந்தார். அவரை தமிழிசை வாசலில் வந்து வரவேற்றார். அவருடன் தமிழிசையின் கணவர் சவுந்தர்ராஜன் மற்றும் குடும்பத்தினர் ஆகியோரும் வரவேற்றனர்.
அங்கு அவர் தமிழிசைக்கு நேரில் ஆறுதில் கூறினார். குமரி அனந்தன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். சிறிது நேரம் அங்கிருந்தார். அப்போது தமிழிசை குடும்ப உறுப்பினா்களை அமித்ஷாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். 15 நிமிடம் அங்கிருந்து விட்டு மீண்டும் ஓட்டலுக்கு திரும்பினார்.
அமித்ஷாவுடன் மத்திய மந்திரி முருகன், அண்ணாமலை ஆகியோரும் வந்திருந்தனர். அமித்ஷா வுக்கும், மற்றும் இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் தமிழிசை நன்றி தெரிவித்தார்.