தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பதவி காலம் முடிந்து விட்ட நிலையில் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் நயினார் நாகேந்திரன் டில்லியில் முகாமிட்டு உள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீரில் இருந்து இன்று இரவு டில்லி திரும்புகிறார். அதன் பிறகு அவர் நயினார் நாகேந்திரனை சந்தித்து புதிய தலைவர் நியமனம் குறித்து முடிவு செய்வார் என தெரிகிறது.
நாளை இரவு 10.20 மணிக்கு அமித்ஷா சென்னை வருகிறார். ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் தங்கும் அமித்ஷா நாளை மறுநாள் காலை 10 மணி முதல் மாலை 4மணி வரை பாஜகவினர் மற்றும் கூட்டணி கட்சியினரை சந்தித்து பேசுவார் என கூறப்படுகிறது. அப்போது எடப்பாடி, ஓபிஎஸ் , அண்ணாமலை உள்ளிட்டோரும் அமித்ஷாவை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது கூட்டணி, புதிய தலைவர் நியமனம் குறித்து முடிவு எடுக்கப்படலாம் என பாஜகவினர் தரப்பில் கூறப்படுகிறது.
மாலை 4. 30 மணிக்கு அமித்ஷா சென்னை மயிலாப்பூர் பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு டில்லி புறப்பட்டு செல்கிறார்.