அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா பதவி விலக கோரி தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாடாளுமன்றத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. அரசியல் கட்சிகள், அமைப்புகள் என தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன.
அந்த வகையில் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் அமித்ஷாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில பொதுச் செயலாளர் சிவ. முருகேசன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தை மாநில துணைப் பொதுச் செயலாளர் இலக்கிய செல்வி தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தை மாநில செயலாளர் புரட்சிமணி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். மாவட்ட செயலாளர் பொன்.ஆனந்த், மாவட்டத் துணைச் செயலாளர் செல்வராஜ், மகளிர் அணி செந்தமிழ் செல்வி, ஒன்றிய தலைவர்கள் முருகையன், ராஜேந்திரன், ரெங்கசாமி, ஒன்றிய செயலாளர் செல்வம் மற்றும் பலர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும் உடனே அவர் பதவி விலக வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.