அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து முன்முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களம் இறங்கியுள்ளார். இருவருக்கும் இடையில் பலத்த போட்டி நிலவுகிறது. இதுவரை நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் இவர்தான் வெற்றி பெறுவார் என கருத்து கணிப்புகள் துல்லியமாக கூறும். ஆனால் இந்த தேர்தல் அப்படி இல்லை. யாருக்கு வெற்றி என்பது இதுவரை இழுபறியாக இருப்பதாகவே கூறப்படுகிறது.
இந்நிலையில், அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் வெற்றிபெற மதுரையில் உள்ளஅனுஷத்தின் அனுக்கிரகம் சார்பில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. இதில் கமலா ஹாரிஸ் பேனர் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது.
h