திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தமிழக – ஆந்திர மாநில எல்லைப்பகுதியில் உள்ள மலைகிராமமான வெலதிகாமணிபெண்டா கிராமத்தில் இன்று உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி கள ஆய்வு மேற்க்கொண்டார், அப்பொழுது ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு சமைக்கப்படும் உணவுகளை ஆய்வு செய்து, வகுப்பறையில் தரையில் அமர்ந்து மாணவர்களின் கற்றல் திறன் குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார், அதனை தொடர்ந்து அங்கன்வாடி மையத்தில், ஆய்வு மேற்க்கொண்டார்.
பின்னர் வெலதிகாமணிபெண்டா ஊராட்சி மன்ற அலுவலகத்தில், ஆய்வு செய்த ஆட்சியர் குழாய் வரி, வீட்டு வரியை ஏப்ரல் மாதத்திற்குள் வசூலிக்க, ஊராட்சி மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்..
அதனை தொடர்ந்து நியாயவிலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு, மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கும் இயந்திரத்தையும், ஆய்வு செய்து, கலைஞர் கனவு இல்ல கட்டுமான பணியை ஆய்வு செய்தார்..
அதனை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலத்தில் ஆய்வு மேற்க்கொள்ள வந்த போது, பொதுமக்கள் மனு அளிக்க நின்றிந்த போது,
அவர்களிடம் சென்ற ஆட்சியர் அவர்களின் மனுக்களை பெற்று ஏன் இன்னும் இவற்றின் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வாணியம்பாடி வட்டாச்சியிரிடம் கேள்வி எழுப்பினார்..
அப்பொழுது மூதாட்டி ஒருவர் மனு அளிக்க வந்த போது, கிராம நிர்வாக அலுவலரை நீங்கள் அந்த பாட்டியிற்கு விளக்கம் அளியுங்கள் எப்படி விளக்கமாக கூறுகிறார்கள் என்று பார்க்கலாம் என ஆட்சியர் சிவசௌந்தரவல்லி கூறியதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் மூதாட்டியிற்கு மனு மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விளக்கமளித்தார்..
அப்பொழுது, ஆட்சியர் இந்த கிராமத்தில் இ- சேவை மையம் இல்லையான என கிராம மக்களிடம் கேட்டபோது, அவர்கள் இல்லையென கூறியதையடுத்து, உடனடியாக இப்பகுதியில் இ – சேவை மையம் அமைக்க ஏற்பாடுகள் செய்யும் படி வட்டாச்சியருக்கு உத்தரவிட்டார்..
மேலும் அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஒன்றிணைந்து, இப்பகுதியில் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் அழைப்பதற்கு கூட செல்போன் சிக்னல் கிடைப்பதில்லையெனவும், தங்களுக்கு இப்பகுதியில் செல்போன் டவர் அமைக்க வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர், அதனை தொடர்ந்து தொலை தொடர்பு நிறுவனங்களிடம் பேசி உடனடியாக இப்பகுதியில் செல்போன் டவர் அமைக்க ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்..