திருச்சி, முசிறி மேல வடுகப்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சந்தானம். இவரது மகன் கலைச்செல்வன் (35). இவர் தனியார் ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் டிரைவாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று கர்ப்பமாக இருக்கும் தனது மனைவியை டாக்டரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்துவிட்டு, மீண்டும் வீட்டில் விட்டுவிட்டு, தனது ஆம்புலன்ஸை ஆஸ்பத்திரியில் கொண்டு நிறுத்தியுள்ளார். பின்னர் நண்பர்களை பார்த்துவிட்டு டூவீலரில் தனது ஊருக்கு செல்ல
முசிறி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே சென்ற போது அவர் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே கலைச்செல்வன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்ர். இச்சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிந்து விபத்துக்கு காரணமான வாகனத்தை தீவிரமாக தேடி வந்தனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வந்த நிலையில் கலைச்செல்வன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது லாரி என்பது தெரிய வந்தது. மேலும் தீவிர விசாரணையில் லாரி டிரைவர் லால்குடி வட்டம் மங்கம்மாள்புரம் காளியம்மாள் கோவில் தெருவை சேர்ந்த ராஜா ( 38 ) என்பதும் தெரியவந்தது.அந்த லாரியை போலீசார் தேடி வந்த நிலையில் முசிறி போலீஸ் ஸ்டேசன் முன்பு வாகன சோதனை செய்த போது அங்கு வந்த லாரியை கண்டுபிடித்து லாரி டிரைவர் ராஜாவை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது