Skip to content
Home » ஆம்புலன்சில் பிறந்த குழந்தை… மருத்துவ உதவியாளருக்கு பாராட்டு

ஆம்புலன்சில் பிறந்த குழந்தை… மருத்துவ உதவியாளருக்கு பாராட்டு

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுகா மருவூரை சேர்ந்தவர் தினகரன். இவரது மனைவி புவனா மேரி (22). இவர் 3 வது பிரசவத்திற்காக தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு செல்ல 108 ஆம்புலன்சை அழைத்தனர். தகவலறிந்ததும் மருவூர் 108 ஆம்புலன்ஸ் தினகரன் வீட்டிற்கு விரைந்து சென்று புவனா மேரியை அழைத்துக் கொண்டு தஞ்சாவூர் இராசா மிராசுதார் மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தது. சிறிது தூரத்திலேயே புவனா மேரிக்கு திடீரென பிரசவ வலி அதிகமானது.

உடன் துரிதமாக செயல்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் அசோக் பாபு சாலையோரம் ஆம்புலன்ஸ்சை நிறுத்தினார். தொடர்ந்து கர்ப்பிணி பெண் புவனா மேரிக்குஅவசர மருத்துவ உதவியாளர் மனோஜ் உடனடியாக பிரசவம் பார்த்தார். இதில் புவனா மேரிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்பு அவரை அருகில் உள்ள திருவையாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தாயையும், குழந்தையையும் அனுமதித்தனர். இதைக்கண்ட நோயாளியின் உறவினர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் ஆம்புலன்ஸ் டிரைவர் அசோக் பாபு மற்றும் மருத்துவ உதவியாளர் மனோஜ் ஆகியோரை பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *