டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி மயிலாடுதுறையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் திமுகவினர் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
நாடு முழுவதும் இன்று டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் மயிலாடுதுறையில் திமுக அலுவலகமான பகுத்தறிவு மன்றம் அருகில் திமுக சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம் எல் ஏ தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அனைவரும் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் நகராட்சி தலைவர் செல்வராஜ் உள்பட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்