Skip to content
Home » திருமண விழாவில் மணமகன் உருக்கம்…. அம்பானி கண்ணீர்

திருமண விழாவில் மணமகன் உருக்கம்…. அம்பானி கண்ணீர்

  • by Senthil

தொழிலதிபரும் உலக பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் ஜூலை மாதம் 12-ம் தேதி நடக்கிறது. திருமணத்திற்கு முந்தைய விழா குஜராத்தில் நேற்று முன்தினம் தொடங்கி இன்று வரை நடைபெற்றது.. ஜாம் நகரில் நடந்து வரும் இந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலும் இருந்து பிரபலங்கள் வரவழைக்கப்பட்டு விழா கொண்டாடப்பட்டது. இதில்  சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்,  பாலிவுட் நட்சத்திரங்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ஒவ்வொரு நாளும்,

ஆட்டம், பாட்டம்,  விருந்து என பாரம்பரிய முறைப்படி   சடங்குகள் நடந்தது.

இந்நிலையில், மணமகன் ஆனந்த் அம்பானி விருந்தினர்கள் முன் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: தனக்காக தன்னுடைய குடும்பத்தினர் பல்வேறு விஷயங்கங்களை செய்துள்ளனர். என்னுடைய வாழ்க்கை மலர் படுக்கையால் ஆனது அல்ல. முட்களின் வலியை நானும் அனுபவித்துள்ளேன். சிறுவயதில் இருந்தே உடல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை அனுபவித்துள்ளேன். என்னுடைய அப்பாவும் அம்மாவும் ஒரு நாளும் என்னை கைவிடவில்லை. எப்போதும் எனக்கு முழு ஆதரவு அளித்தார்கள் என உருக்கமாக கூறினார்.
ஆனந்த் அம்பானியின் பேச்சை கேட்டதும் முகேஷ் அம்பானி தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதார். முகேஷ் அம்பானி தேம்பி அழும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.

முன்னதாக நிகழ்ச்சியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரும், ஆனந்த் அம்பானியின் தந்தையுமான முகேஷ் அம்பானி, உருக்கமான உரையை ஆற்றினார். நிகழ்ச்சிகு வருகை தந்த விருந்தினர்களை வரவேற்ற முகேஷ் அம்பானி, ஆனந்த் மற்றும் ராதிகா தம்பதியருக்கு ஆசி வழங்கக்கோரி கேட்டுகொண்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!