தொழிலதிபர் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்வுகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது. பாலிவுட்டின் பல நட்சத்திரங்கள், முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வு இணையத்தில் அதிகம் பேசு பொருளானது.
இந்த நிகழ்வை போலவே, கவனம் பெற்ற இன்னொரு விஷயம் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் கியூட்டான இரண்டு சுட்டிக் குழந்தைகள் தான். இஷாவுக்கும் தொழிலதிபர் ஆனந்த் பிராமலுக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கடந்த 2022-ம் ஆண்டு இவர்களுக்கு கிருஷ்ணா, ஆதித்யா என்ற இரட்டை குழந்தைகள் பிறந்தது.
இஷா தான் கர்ப்பமாக இருந்தபோது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தான் பெரும்பாலும் ஓய்வெடுத்தார். இவரது அம்மா நீதா அம்பானியும் உடனிருந்து கவனித்துக் கொண்டார். இப்போது இந்த வீட்டை பிரபல ஹாலிவுட் நடிகர் பென் அஃப்லெக்கும் அவரது காதலி நடிகை ஜெனிஃபர் லோபஸும் ரூ. 500 கோடிக்கு வாங்கி இருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட 35,000 சதுர அடியில் கட்டப்பட்ட இந்த வீட்டில் 12 படுக்கையறைகள், 24 பாத்ரூம்கள், ஜிம், ஸ்பா, பேட்மிண்டன் கோர்ட் உள்ளிட்டப் பல வசதிகளும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.