நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்னும் தூய்மை பணியில் கரூர் மாநகராட்சி மற்றும் கரூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் இணைந்து நடத்தும் பிளாஸ்டிக் ஒழிப்பு மாபெரும் தூய்மை பணி முகாம் இன்று நடைபெற்றது.
கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணைமேயர் தாரணி சரவணன், ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற தூய்மை பணியில் அமராவதி ஆற்று படுகையில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை கொக்கி போன்ற அமைப்பு கொண்ட இரும்பு கம்பிகள் கொண்டு எடுத்து அகற்றினர். இதில் கரூர்
மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள் மற்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த முகாமில் சுமார் இரண்டு டன் பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கப்பட்டன. முன்னதாக லைட் ஹவுஸ் பேருந்து நிறுத்தம் அருகில் அமைந்துள்ள வாக் அண்ட் ஜாக் மேம்பாலம் நுழைவு வாயில் முன்பு நின்று அனைவரும் இணைந்து தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.