திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பூர் மாவட்டத்திலுள்ள புதிய பாசன நிலங்களுக்கு அமராவதி பிரதானக் கால்வாய் வழியாக 38016 மில்லியன் கன அடிக்கு மிகாமல் 08.08.2023 முதல் 18.08.2023 வரை 10 நாட்களுக்கு, நிலையிலுள்ள பயிர்களை காப்பாற்றும் பொருட்டு சிறப்பு நனைப்புக்கும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டும், அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், திருப்பூர் மாவட்டத்திலுள்ள 25,250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்” எனக் குறிப்பிட்டுள்ளது.
அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவு….
- by Authour
