Skip to content
Home » நடிகை அமலா பாலுக்கு….. ‘இலை‘ பிறந்தது

நடிகை அமலா பாலுக்கு….. ‘இலை‘ பிறந்தது

  • by Senthil

கேரளாவை சேர்ந்தவர் நடிகை அமலாபால். இவர் இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து கடந்த 2013-ம் ஆண்டு, இரு தரப்பு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்தார்.நான்கு வருடங்களில், இருவரும் ஒருமித்த மனதுடன் விவாகரத்து பெற்று பிரிந்து சென்றனர். அதன் பின்னர் தனது நீண்ட நாள் நண்பர் ஜெகத் தேசாய் என்பவரை அமலாபால் கடந்த வருடம் நவம்பர் 3-ம் தேதி திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் முடிந்த  சூட்டோடு, தான் கர்ப்பமாக இருப்பதாகவும்  கூறினார்.  கடந்த வாரத்தில் நடிகை அமலாபால் குழந்தை பிறப்பை எதிர்நோக்கி இருப்பதாகச் சொல்லி மருத்துவமனையில் இருந்து புகைப்படங்களைப் பகிர்ந்தார்.

கடந்த 11-ம் தேதி தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக  அமலாபால் தம்பதி மகிழ்ச்சியான செய்தி சொல்லி இருக்கிறார்கள். குழந்தைக்கு  பெயர் என்ன தெரியுமா?  இலை எனப் பெயரிட்டிருக்கிறார்களாம். இயற்கை மீது அதீத ஆர்வம் கொண்டவரான அமலாபால் காடுகள், மலைகளில் பயணம் செய்வதில் பிரியம் கொண்டவர். அதனால்,இயற்கை சார்ந்தே இருக்க வேண்டும் என தங்கள் மகனுக்கு இலை என  பெயர் சூட்டி உள்ளனர்.

மாவிலை, இரட்டை இலை, வாழை இலை என  ரசிகர்கள் பலரும் பலவிதங்களில் குழந்தைக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!