கோவை, பொள்ளாச்சியில் இருந்து கேரள மாநிலம் அருகில் உள்ளதால் ஏராளமான பொதுமக்கள் எல்லையோரம் உள்ள கோவிந்தாபுரம் கோபாலபுரம் மீனாட்சிபுரம் நடுப்புனி செம்மணம்பதி சோதனை சாவடிகள் வழியே அன்றாட பணிகளுக்காக சென்று வருவது வழக்கம் இந்நிலையில் கேரள போலீசார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தமிழக வாகனங்களை நிறுத்தி வினோதமான அபராதங்களை விதித்து வருகின்றன சமீபத்தில் நான்கு நண்பர்களுடன் ஒரு பெண் சென்ற வாகனத்தை நிறுத்தி ஆதார் அட்டை உட்பட பல்வேறு ஆவணங்களைக் கேட்டு அபராதம் விதித்தது வைரல் ஆகி வந்தது. இந்நிலையில் பொள்ளாச்சி அடுத்த கோபாலபுரம் சோதனை சாவடியை கடந்து சென்ற தமிழக வாகனத்தை வழிமறித்த கேரளம் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஜிபில் வந்த ஒரிஜினல் டயருக்கு பதில் ஆல்ட்ரேஷன் டயர் போட்டுள்ளதால் அபராதம் இருப்பதாக கூறி நான்கு டயர்களுக்கும் தலா ஐந்தாயிரம் என 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர் பின் கதவில் பொருத்திருந்த ஸ்டெப்ணியை பார்த்த அதிகாரிகள் அதற்கும் ஐந்தாயிரம் என 25000 ரூபாய் மொத்தமாக வசூலித்தனர் இதனால் அதிர்ச்சி அடைந்த வாகனத்தை ஓட்டி சென்ற இளைஞர் கேரளா அதிகாரிகளின் நடவடிக்கையை சுட்டிக்காட்டி தமிழக வாகனங்களுக்கு மட்டும் விதிப்பது ஏன் அதேபோல் வரும் கேரள வாகனங்களுக்கு ஏன் அபராதம் விதிக்கவில்லை என கூறி வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார் தற்போது இந்த காட்சிகள் வைரல் ஆகி வருகிறது