பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும். பாஜவின் நோக்கம் அதுதான்.
ஆளுநரும், முதல்வரும் அவரவர் வேலைகளை செய்து வருகின்றனர். ஆளுநரின் வார்த்தைகள் எந்த இடத்திலும் குந்தகம் விளைவிக்கும் வகையில் இல்லை. மக்களவை தேர்தலில் கூட்டணி கண்டிப்பாக ஓபிஎஸ்சுடன் இருக்கும். காவல்துறை அதிகாரிகளுக்கு மன உளைச்சல் போக்க முதல்வர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.