தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி அறிவித்த பொள்ளாச்சி பாராளுமன்ற வேட்பாளர் வசந்த ராஜன் வேட்பாளராக பொள்ளாச்சி சுப்பிரமணி சாமி கோவில் தரிசனம் செய்து மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது இதில் மடத்துக்குளம் உடுமலைப்பேட்டை பொள்ளாச்சி பகுதியில் சேர்ந்த கட்சியின் மூத்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர் வேட்பாளர் வசந்த ராஜன் கூறுகையில் தமிழ்நாட்டில் கொப்பரை விலை ஏற்றம்,வெள்ளலூர் குப்பை கிடங்கு,ரயில் சேவைகள் தென்னை நார் உற்பத்தி என பல்வேறு திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை எனவும் திமுக அறிவித்த திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசின் திட்டங்கள் ஆகும்,திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழக மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர் தனக்கு வாய்ப்பளித்த பாரதப் பிரதமர் மோடி, அமிர்ஷாமற்றும் மாநிலத் தலைவர் அண்ணாமலை,மத்திய அமைச்சர் முருகன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து மீண்டும் பாரத பிரதமர் மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார் தமிழகத்தில் நிற்கும் பாஜக வேட்பாளர்கள் அதிக ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்