அரியலூர் மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் அரியலூர் வாணி மகாலில் நடந்தது. திமுக சட்டதிட்ட திருத்தக்குழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர் தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள திமுக ஒன்றிய செயலாளர்களுக்கு பிரசார வாகன சாவிகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தலைமை கழக அரியலூர் சட்டமன்ற தொகுதி மேற்பார்வையாளர் முனைவர் .தி.சபாபதிமோகன், குன்னம் சட்டமன்ற தொகுதி மேற்பார்வையாளர் A.K.அருண்,ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கலா சுந்தரமூர்த்தி,
ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் மற்றும் மாவட்ட,
ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள், கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.