சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தலைவர்கள் கூறிய கருத்துக்கள் வருமாறு:
ஜெயக்குமார்(அதிமுக):
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7.2% என்பதை குறைக்கக் கூடாது என்று தீர்மானத்தில் சேர்க்க வேண்டும் என்று ஜெயக்குமார் கூறினார்.
அதனைத் தொடர்ந்து அந்த வாசகம் தீர்மானத்தில் இடம் பெற்றது.
திருமாவளவன்(விசிக):
தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய ‘கூட்டு நடவடிக்கை குழு’வை விசிக வரவேற்கிறது. தென்மாநிலங்களவை பிரதிநிதித்துவம், நிதி ஆணையத்தின் வரி வருவாய்ப் பகிர்வு முறை குறித்தும் விவாதம் தேவை. அமெரிக்காவில் இருப்பது போல அனைத்து மாநிலங்களுக்கும் சம எண்ணிக்கையில் உறுப்பினரை அளிக்க வேண்டும். நிதி ஆணையம் வரி வருவாயைப் பகிர்ந்து கொள்வதற்கு கடைபிடிக்கும் அம்சத்தால் தென் மாநிலங்கள் பாதிப்பு. தொகுதி மறுவரையறையில் தலித், சிறுபான்மையினர் வாக்குகளை சிதறடிக்கும் நடவடிக்கை இருக்கக் கூடாது என்று கூறினார்.
அன்புமணி ராமதாஸ்(பாமக)
தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் அனைத்து தென் மாநில முதலமைச்சர்களை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச வேண்டும்” ஒருமித்த கருத்தை உருவாக்கி ஒரு கூட்டமைப்பாக சென்று நாம் வலியுறுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது, அப்போதுதான் இந்த பிரச்சனைக்கு உறுதியான தீர்வு கிடைக்கும் என்று கூறினார்.
கமல்ஹாசன்(மநீம)
ஜனநாயகம், கூட்டாட்சி தத்துவமும் தேசிய அளவில் நிலைபெற்று இருக்க தற்போதுள்ள எம்.பி.க்களே போதுமானது . “ஜனநாயகம், கூட்டாட்சி இரண்டும் நம் இரண்டு கண்கள். இவை தேசிய அளவில் நிலைபெற்று இருக்க தற்போதைய எம்.பி.க்கள் எண்ணிக்கையே போதுமானது. எனவே, தொகுதி மறுசீரமைப்பு முயற்சி தேவையற்றது. தேர்தல் வரும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு, தமிழ்நாட்டுக்கான உரிய நிதியை வழங்காதது, மும்மொழிக்கொள்கை அமல்படுத்துவது ” இதையெல்லாம் பார்த்தால் எதேச்சதிகார போக்குதான் தெரிகிறது என கூறினார்.
ஆனந்த்(தவெக): இந்த திட்டம் தமிழகத்தை பெரிதும் பாதிக்கும். தமிழகத்திற்கு அது தண்டயைாக இருக்கும்.
முத்தரசன்(இந்திய கம்யூ)
எதிர்காலத்தில் ஒரு ஆபத்து உள்ளது அதை வரவிடாமல் தடுப்பதற்கான நடவடிக்கையை வரவேற்கிறோம். ஒன்றிய அரசிடம் வெளிப்படைதன்மை இல்லை, எல்லாவற்றிலும் மர்மமாக உள்ளது; மிகச் சிறப்பான நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழ்நாடு பெற்றுள்ளது என்று கூறினார்.
வேல்முருகன்(தவாக)
மத்தியில் எந்த கட்சி ஆட்சி செய்தாலும் தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டை வஞ்சிக்கும் நிலைதான் உள்ளது. அனைத்துகட்சி கூட்டம் சரியான நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள சரியான முடிவு என்று கூறினார்.
ஜவாஹிருல்லா(மமக)
வடமாநிலங்களில் தொகுதிகள் அதிகரிக்கப்பட்டால் அது பிரச்சனை,