கோவை மாவட்டம், பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 6400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. பழைய ஆயக்கட்டின் முதல் போக பாசனத்துக்கு ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரி விடுத்து வந்தனர். இதனால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஆழியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார்..
இன்று முதல் அக்டோபர் 15 வரை 130நாட்களுக்கு 1205 மில்லியன் கன அடிக்கு நீர் இருப்பு மற்றும் நீர்வரத்துனை பொறுத்து தேவைக்கேற்ப அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆனைமலை
சுற்றுவட்டார பகுதியில் உள்ள பகுதியில் உள்ள 6400 ஏக்கர் பாசன பெறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகளும் விவசாயிகளும்மலர் தூவி வரவேற்றனர் இதில் டி.என்.இ.பி.ராம்பிரகாஷ்,உதவி செயற்பொறியாளர் சிங்கரா வேல், உதவி பொறியாளர் கார்த்திக் கோகுல் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.