கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பழைய ஜெயங்கொண்டம் கிராமத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் மஹாவீர் ஜெயந்தி அன்று விற்பனைக்காக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த தினேஷ் குமார் என்பவரை கைது செய்து அவரது வீட்டிலிருந்து அவரிடமிருந்து 381 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். சுமார் 53 ஆயிரம் மதிப்பிலான அந்த மதுப்பாட்டில்களை லாலாப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். அவற்றை இன்று சிந்தலவாடி கிராம நிர்வாக அலுவலர் பிரபு மற்றும் பிள்ளாபாளையம் கிராம நிர்வாக அலுவலர் முரளி ஆகியோர் முன்னிலையில் லாலாபேட்டை ஆய்வாளர் ஜோதி தலைமையிலான போலீசார் 381 குவாட்டர் பாட்டில்களை காவல் நிலைய வளாகத்தில் உள்ள சாக்கடையில் ஊற்றி அழித்தனர். அந்த வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர்.