புதுக்கோட்டைமாவட்டம் ஆலங்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டுக்கும், தமிழுக்கும், தமிழர்களுக்கும் செய்து வரும் அநீதிகளை தமிழ்நாட்டில் ஒவ்வொருக்கும் எடுத்துரைக்கும் வகையில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் எனும் திண்ணைப் பிரச்சாரத்தை
சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார். உடன் ஒன்றிய செயலாளர் தங்கமணி, பள்ளத்து விடுதி நாராயணன், ஆலங்குடி பேரூராட்சிதலைவர்ராசி முருகானந்தம் உள்ளிட்ட திமுகவினர் பங்கேற்றனர்.