உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட காளைகளும், 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். 10 சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் காளைகள் முட்டியதில் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் என சுமார் 83 பேர் காயமடைந்தனர். இதில், 18 காளைகளை அடக்கிய கருப்பாயூரணி கார்த்தி முதல் இடம் பெற்றார். அவருக்கு முதல்வர் தரப்பில் கார் பரிசு வழங்கப்பட்டது. 17 காளைகளை அடக்கி பூவந்தி அபிசித்தர் 2-வது இடம் கிடைத்தது. அவருக்கு பைக் வழங்கப்பட்டது. 12 காளைகளை அடக்கி குன்னத்தூர் திவாகர் 3-வது இடம் பிடித்தார். சிறந்த காளையாக திருச்சி மாவட்டம் மேலூர் குணா என்பவரின் காளை தேர்ந்தெடுக்கப்பட்டு கார் பரிசு வழங்கப்பட்டது.