இவரது கணவர் வெளிநாட்டில் பணியாற்றி வருவதாக சொல்லப்படுகிறது. நேற்று முன்தினம் மதுரையில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு விளாம்பட்டி காவல் நிலையத்திற்கு ஷர்மிளா பணிக்குச் சென்றார் இன்று காலை வீட்டை திறந்து பார்த்தபோது கதவு திறக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து பொருட்கள் வீட்டில் பரவி கிடந்தன. அப்போதுதான் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த சுமார் 250 சவரன் தங்க நகைகள் மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் பணம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஷர்மிளா அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். கொள்ளையடிக்கப்பட்ட நகையின் மதிப்பு சுமார் ஒன்றரை கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
கொள்ளை கும்பல் குறித்து விசாரிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக சர்மிளா மற்றும் அவரது உறவினர்கள் நண்பர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது.