நடிகர் அஜித்குமார் நடிக்கவிருக்கும், 62வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. லைகா நிறுவனம் தயாரிக்கிறது இயக்குனர் மகிழ் திருமேனி படத்தை இயக்குகிறார்.
இந்நிலையில், படத்தலைப்பு உள்ளிட்ட மற்ற அப்டேட்டுகள் மார்ச் மாத இறுதியில் கிடைக்கும் என அஜித்தின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.
ஆனால், அஜித்குமார் தந்தையின் மறைவு காரணமாக அப்டேட்டுகள் தள்ளிப் போயின. ஏப்ரல் மாதத்திலாவது ஏதாவது அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்த்த ரசிகர்கள் இதுவரை அப்டேட் ஏதும் இல்லை என்பதால் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்.
நடிகர் அஜித்குமாரின் பிறந்த நாளான மே ஒன்றாம் தேதியாவது ஏதாவது அப்டேட் கிடைக்குமா? என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஏற்கனவே அப்டேட் கேட்டு அமர்க்களப்படுத்தும் நடிகர் அஜித் குமாரின் ரசிகர்கள், தற்பொழுது திருச்சி மாநகரம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி அப்டேட் கேட்டுள்ளனர்.
அதில், ‘மிஸ்டர் லைகா அப்டேட் விடுங்க.. Quickஆ. #AK62 வெயிட்டிங்ல வெறியேத்தாதீங்க.. இப்படிக்கு, தன்னைத்தானே செதுக்கியவர் அஜித் நற்பணி இயக்கம், திருச்சி’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
நடிகர் அஜித் குமார் ரசிகர்களின் நூதன கோரிக்கை போஸ்டர்கள், காண்போர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.