தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது அஜித்தின் 62வது அடுத்த படம். இந்த படத்தின் அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட இப்படம் சில காரணங்களால் கைவிடப்பட்டது. இதையடுத்து ‘தடம்’, ‘கலகத்தலைவன்’ ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
லைக்கா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க ஆக்ஷனில் உருவாக்க திட்டமிட்டுள்ள இந்த படத்தின் கதை இறுதி செய்யப்பட்டுவிட்டது. இதையடுத்து நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நிறைவுபெற்றவுடன் விரைவில் அறிவிப்பை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் பிரபல சீரியல் நடிகையான சைத்ரா ரெட்டி, ‘ஏகே 62’ படத்தில் இணைந்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் மகிழ் திருமேனி ஆகியோருக்கு நன்றி கூறி படத்தில் இணைந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். பெங்களூரைச் சேர்ந்த சைத்ரா ரெட்டி ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியல் மூலமாக தமிழில் அறிமுகமானார். ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘யாரடி நீ மோகினி’ சீரியலிலும் நடித்து பிரபலமானார். அதன்பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘கயல்’ சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.