முன்னணி நடிகரான அஜித் குமார், துணிவு படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6-ந் தேதி வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 63-வது படமான ‘குட் பேட் அக்லி’ படத்திலும் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் மாதம் 10-ந் தேதி திரைக்கு வருகிறது.
அஜித் குமார் அடுத்ததாக நடிக்க உள்ள புதியபடம் (64-வது படம்) குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, இந்த படத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிய ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கிறது. அஜித்தின் ‘பில்லா, ஆரம்பம்’ போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இந்த படத்தையும் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.