கார் ரேஸ் மற்றும் சாகசத்தின் மீதான விருப்பத்திற்கு பெயர் போனவர் நடிகர் அஜித், படப்பிடிப்பு இல்லா நேரத்தில் பைக் ஓட்டுவதையோ அல்லது கார்களை ஓட்டுவதையோவைத்திருக்கிறார்.
ரசிகர்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு அஜர்பைஜானில் முடிவடைந்தது. இதில் நடித்து விட்டு, சென்னை திரும்பும் முன் துபாய் சென்ற நடிகர் அஜித்குமார், அங்கு ரூ.9 கோடி மதிப்புள்ள ‘Ferrari’ (ஃபெராரி ஃபெராரி )என்கிற சொகுசு காரை வாங்கியுள்ளார்.
ரேஸில் ஆர்வமிக்கவரான அஜித்திடம் ஏற்கனவே ரூ.34 கோடி மதிப்புள்ள லம்போர்கினி, லேண்ட் ரோவர் டிஸ்கவரி, மெர்சிடஸ் பென்ஸ் உள்ளிட்ட 6 சொகுசு கார்கள் உள்ள நிலையில், தற்போது அந்த வரிசையில் Ferrari-யும் இணைந்துள்ளது.
இயக்குனர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்த நிலையில், இதைத் தொடர்ந்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளார்.