தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதி ஷாலினி – அஜித் ஜோடி. இவர்களுக்கு காதல் திருமணம் நடந்து 24 வருடங்கள் ஆகிறது. 24-ம் ஆண்டு திருமண நாள் கொண்டாட்டத்திற்காக இருவரும் இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு சென்றுள்ளனர். அங்கிருந்த ரசிகர்கள் அஜித் – ஷாலினிக்கு தங்கள் வாழ்த்துகளைச் சொல்லி புகைப்படங்கள் எடுத்துள்ளனர். இந்த வீடியோவும் இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது.
குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை ஷாலினியும் அவ்வப்போது தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்வதுண்டு. அஜித் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்க இருக்கிறார்.