நடிகர் அஜித்தின் துணிவு திரைப்பட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் AK62 திரைப்படத்தின் அறிவிப்பு எப்போது தான் வரும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தநிலையில் நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் உள்ள போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அஜித் குமார் தனக்கென ரசிகர் மன்றம் வைத்துக்காௌ்ளவில்லை. ’ஆனாலும் ரசிகர்கள் அவரை விடுவதில்லை.விமான நிலையங்கள் உள்பட பொதுஇடங்களுக்கு அவர் வருவது தெரிந்து விட்டால் அவரை சந்திக்க மணிக்கணக்கில் காத்துகிடக்கிறார்கள். அப்படி என தனக்காக காத்திருக்கும்
ரசிகர்களை அஜித் அலட்சியப்படுத்துவதில்லை. செல்பிக்கு போஸ் கொடுத்து அவர்களை சந்தோசமாக அனுப்பி வைப்பார். இந்நிலையில் அஜித் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக அஜித்துக்கு இணையாக அவரது மகள் ஆத்விக்கின் போட்டோவும் வைரலாகி வருகிறது. உடன் மனைவி ஷாலினியும் , மகளும் உள்ளனர். அஜித் ரசிகர்கள் உற்சாகமாக இதை வைரலாக்கி வருகிறார்கள்.