Skip to content
Home » கவர்னர் ரவியுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் சந்திப்பு….

கவர்னர் ரவியுடன் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் சந்திப்பு….

  • by Senthil

 இந்திய பெருங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பு குறித்து ஆலோசிப்பதற்காக கொழும்பு பாதுகாப்பு மாநாடு, இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று நடந்தது. இதில் இந்தியா, இலங்கை, மாலத்தீவு மற்றும் மொரீசியஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள், துணை ஆலோசகர்கள் பங்கேற்றனர். வங்கதேசம் மற்றும் செஷல்ஸ் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பார்வையாளர்களாக பங்கேற்றனர்.

இதில் பங்கேற்பதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இலங்கை சென்றார். அவர் அந்நாட்டு அதிபர் ரனில் விக்ரமசிங்கேவை நேற்று சந்தித்து இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்புகுறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கையில் இருந்து  சென்னை வந்த அஜீத் தோவல்,  கவர்னர் மாளிகைக்கு சென்று  கவர்னர் ரவியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!