AITUC ஆட்டோ ஓட்டும் தொழிலாளர் சங்க பெயர் பலகை திறந்து AITUC கொடியேற்றப்பட்டது. மாவட்டத் தலைநகர் அரியலூர் நகரத்தையொட்டி அருகருகில் பல தனியார் சிமெண்ட் ஆலைகள் இயங்கி வருகிறது. தற்போது அரியலூர் அரசு கலைக்கல்லூரிக்கு அருகே மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டு முடியும் தருவாயில் விரைவில் திறப்பு விழா நடைபெற இருக்கிறது. ஏற்கனவே மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இவ்வாறான நிலையில் அரியலூரை சுற்றி சிறு சிறு கடைகள் பெருகி அதனை நம்பி வாழ வேண்டிய நிலையில் பல குடும்பங்கள் இருந்து வருகின்றன. இதேபோல ஆட்டோ ஓட்டுநர்களும் அதனை நம்பி வாழ வேண்டிய நிலையில் ஆட்டோவும் அதிகமாகி வருகிறது. இச்சூழலில் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களின் நலனுக்காக சங்கம் அமைத்து ஆட்டோ ஸ்டாண்ட் ஏற்படுத்தும் வகையில் AITUC தொழிற்சங்க அமைப்பில் ஆட்டோ ஓட்டுநர்கள் இணைத்து வருகின்றனர்.அதனையொட்டி அரியலூரை ஒட்டியுள்ள எருத்துக்காரன்பட்டி ஊராட்சியில் அடங்கிய குரும்பஞ்சாவடி ரவுண்டானா சாலையின் வடபுறம் AITUC ஆட்டோ ஓட்டும் தொழிலாளர் சங்கம், குரும்பஞ்சாவடி கிளை, என்ற பெயரில் இன்று சங்கப் பெயர் பலகையை தோழர்.
வால்பாறை மாணிக்கம் திறந்து வைத்தார்.சங்க AITUC கொடியை AITUC அரியலூர் மாவட்டப் பொதுச் செயலாளர் தோழர் T. தண்டபாணி ஏற்றி வைத்து ஆட்டோ தொழிலாளர்களின் நலன்கள் குறித்து விளக்கிப் பேசினார். அனைவருக்கும் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. விழா நிகழ்ச்சியில் CPI நகர கிளை ந. கோவிந்தசாமி, எருத்துக்காரன்பட்டி ஊராட்சி குடிநீர் பம்பு ஆப்ரேட்டர் R. மருதமுத்து, துப்புரவு பணியாளர் துரைராஜ், உட்பட பலர் கலந்து கொண்டனர். குரும்பஞ்சாவடி ஆட்டோ ஸ்டாண்ட் தோழர்கள் வெ. சேகர், வெ. மேகராஜ், க. முருகேசன், ஆ. பெரியார்செல்வன், ரெ. பவுல்ராஜ், ச. சத்தியமூர்த்தி, சி. பாரதிராஜா, நீல. மணிகண்டன், செ. செல்வகுமார், லெ. ராஜ்மோகன், ந. ராஜா, ந. அசோக் உட்பட ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்துகொண்டனர்.