கட்டுமான பணிகளில் ஈடுபடும் கட்டட தொழிலாளர்களுக்கு, புதுச்சேரி மாநிலத்தில் வழங்குவது போல், அனைத்து மாநிலங்களிலும் மத்திய சட்டம் 2/281ன் படி தீபாவளி அல்லது பொங்கல் பண்டிகை பரிசாக குறைந்தபட்சம் ரூ. 5000/- வழங்கப்பட வேண்டும். ஓய்வூதியம் ரூ. 6000/- வழங்க உத்திரவிடப்பட வேண்டும். பெண்களுக்கு 55 வயது – ஆண்களுக்கு 60 வயது நிறைவடைந்த தேதியில் இருந்து ஓய்வூதியம் கணக்கிட்டு வழங்கப்பட வேண்டும். கட்டுமான தொழிலாளர் மத்திய சட்டம் – நல வரி வசூல் சட்டங்களை கலைக்கும் முயற்சியை ஒன்றிய அரசு கைவிட்டு முறையாக செயல்படுத்திட வேண்டும். ஐநா சபை – உலக தொழிலாளர் அமைப்பு வழிகாட்டுதல்படி கட்டுமானத் தொழிலாளர்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.
கட்டிட நல வாரியம் மூலமாக மருத்துவ ESI வசதி, காப்பீடு – PF பலன்களை வழங்கிட வேண்டும். கட்டுமான தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புக்கு தேவையான அளவு நல வரி குறைந்த பட்சம் 2% முதல் 5% வரை உயர்த்தி வசூல் செய்திட வேண்டும். வீட்டு வசதி வழங்குவதை எளிமையாக்கிட வேண்டும். தொழிலாளர் குழந்தைகளின் முழு கல்விச் செலவுகளையும் வாரியத்தில் இருந்து வழங்கிட வேண்டும். ஆகிய பல்வேறு கோரிக்கைகளை ஒன்றிய அரசு மற்றும் தமிழக அரசு நிறைவேற்றிட நாடு தழுவிய கோரிக்கை தினமாக அரியலூரில் அண்ணா சிலையருகில் ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் தோழர் T.ஜீவா தலைமை வகித்தார். ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலாளர் தோழர் T.தண்டபாணி சிறப்புரை ஆற்றினார். கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டட சங்க மாவட்டத் தலைவர் G.ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சி.ராமநாதன், திருமானூர் ஒன்றிய செயலாளர் மு. கனகராஜ், AITUC துணைத் தலைவர் R.தனசிங், து.பாண்டியன் ஆகியோர் உரையாற்றினார். சங்க நிர்வாகிகள் K.கரும்பாயிரம், K.ராணி, இ.முருகேஸ்வரி, ஆர். கருப்பையன், பி.முருகானந்தம், ஆர். மரகதம், ஏ.சதீஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்டட தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.