கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், ஐஸ்வர்யாவை கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஸ்டார் தம்பதிகளாக வலம வந்த இருவருக்கும், யாத்ரா, லுங்கா என இரண்டு மகங்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன்னர் தங்கல் 18வருட திருமண வாழ்க்கையை முடித்து கொள்ள இருப்பதாக இருவரும் ஒருமனதாக பதிவிட்டு திரைதுறையினர் உட்பட ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்தனர்.
அந்த பதிவில் அவர்கள் கூறியதாவது, “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது. இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என பதிவிட்டிடுந்தனர்.
இதனை சற்றுமெதிர்பார்க்காத ரசிகர்கம் சிறிய மனகசப்பாகதான் இருக்கும், விரைவில் சரியாகிவிடும் என நம்பினர். தொடர்ந்து இவர்கள் விரைவில் சேர்ந்துவிடுவதாக பல செய்திகள் வெளியானது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த சென்னை சிவில் நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளாராம். அதுமட்டுமல்லாமல், ஐஸ்வர்யாவை வேறொரு பெண்ணிற்காக தனுஷ் ஏமாற்றிவிட்டதாக பிரபல பாலிவுட் விமர்சகரான உமர் சந்து தெரிவித்துள்ளார்.