இந்தியாவில் தகவல் தொடர்பு துறைநாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.. இதுவரை தகவல் தொடர்பு துறையில் 4 ஜி சேவை மட்டுமே செயல்பாட்டில் இருந்தது. சில மாதங்களுக்கு முன் அது 5 ஜி சேவையாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த 5 ஜி சேவை எப்போது திருச்சிக்கு கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்த நிலையில் ஏர்டெல்5 ஜி சேவை திருச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி தில்லைநகர், மலைக்கோட்டை, கே.கே.நகர், திருநகர், பெல், மேலூர் ரோடு, சஞ்சீவி நகர், திருவரங்கம்,மேலூர் ரோடு செல்வபுரம் ஆகிய பகுதிகளில் 5 ஜி சேவை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நெட் ஒர்க் பணி சிறப்பாக இருக்கும். தகவல் தொடர்பு பணி வேகமாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டவுன்லோடு, அப்லோடு பணிகள் விரைவில் முடியும் இதனால் செல்போன் பயன்படுத்தும் இளைஞர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.