திருச்சி ஏர்போர்ட் பாரதிநகர், திலகர் தெரு, காமராஜர் நகர் பகுதிகளை இணைக்கும் மற்றும் ஏர்போர்ட் வயர்லெஸ் சாலைக்குச் செல்லும் பிரதான சாலையைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள்.
காட்டாற்று வெள்ளம் பாய்ந்தோடிய பகுதி போல சேறும், சகதியும் நிறைந்து மேடு பள்ளமாக காட்சி அளிக்கிறது. பார்க்கும்போது இது மக்கள் வசிக்கும் பகுதி என யாரும் கூற முடியாது. அந்த அளவுக்க மோசமாக காட்சியளிக்கிறது.
பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் முடிந்து ஓராண்டாகியும் சாலைகள் போடப்படாதாலும், தோண்டப்பட்ட பள்ளத்தை சரிவர மூடி தற்காலிகமாக சாலையை சீரமைக்காததாலும் நேற்று
முன்தினம் பெய்த மழையினால் சாலைகள் குண்டும், குழியுமாக சேறும், சகதியுமாகவே உள்ளது.
மூன்று ஆண்டுகளாக இப்பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது, இப்பகுதி கவுன்சிலரான ஜாபர் அலியிடம் மக்கள் பலமுறை புகார்அளித்தும் தற்போதுவரை சாலையை சீரமைப்பதாக தெரியவில்லை… தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்க்கு இந்தப் பகுதி மக்கள் படும் அல்லல்கள் தெரிந்தும் அவரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை.
இனி ஜனவரி வரை மழைக்காலம் தான். அதற்குள் சாலை புதுப்பிக்க வழியில்லை. எனவே இனி ஜனவரிக்கு பின்னர் தான் இந்த சாலையை சீரமைப்பாா்கள் என தெரிகிறது. அது வரை இது போன்ற இன்னல்களை ஏர்போர்ட் பகுதி மக்கள் சகித்துக் கொண்டுதான் செல்ல வேண்டுமா… அல்லது மாநகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக இதற்கு தீர்வு காண்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்