ஏர் இந்தியா நிறுவனம் நடத்திய நேர்காணலில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்தததால் மும்பையில் கடும் நெரிசல் ஏற்பட்டது.
ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீசஸ் நிறுவனத்தில் 2,216 காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை ஏர் இந்தியா நிறுவனம் அண்மையில் வெளியிட்டிருந்தது. இதற்கான நேர்காணலில் கலந்து கொள்ள விரும்புவர்கள் நேரடியாக மும்பை கலினா பகுதியில் உள்ள அலுவலகத்துக்கு வருமாறு கூறப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து நேற்று (ஜூலை 16) மும்பையில் உள்ள ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீசஸ் அலுவலகத்தின் முன்பு காலை முதலே ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவியத் தொடங்கினர். சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு விட்டனர்.
இத்தனை பேர் இந்த வேலைக்கு வருவார்களா என்று எதிர்பார்க்காத ஏர் இந்தியா நிறுவனம் குவிந்த இளைஞர்களிடம் விண்ணப்பங்களை பெற்று நேர்முகத்தேர்வு நடத்த முடியவில்லை. எனவே விண்ணப்பங்களை அப்படியே ஒரு அறையில் போட்டுவிட்டு செல்லுங்கள், பின்னர் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கிறோம் என்று கூறிவிட்டது.
ஏர் இந்தியா என்பது ஒருகாலத்தில் அரசாங்க வேலை. இந்தியா என பெயர் இருப்பதால் அரசாங்க வேலை என நினைத்து வந்து விட்டார்களா, அல்லது நாட்டில் இன்னும் வேலை இல்லா திண்டாட்டம் இப்படித்தான் இருக்கிறதா என்று தெரியவில்லை.
ஏர் இந்தியாவில் சுமை தூக்குவதற்கான வேலைக்கு தான் இப்படி இளைஞா்கள் குவிந்தனர். அனைவரும் பல பட்டப்படிப்புகள் படித்தவர்க. இவர்கள் பயணிகளின் உடமைகளை ஏற்றி இறக்கி விடவேண்டும். விமானத்துக்குள் உணவு எடுத்து செல்லவேண்டும் என்ற பணிக்கு தான் இப்படி குவிந்தனர். முதல்நாள் இரவே அந்த அலுவலகத்தில் வரிசை கட்டி இருந்தனா. விடிந்ததும் கூட்டம் கட்டுக்கடங்காமல்போய்விட்டது. இதனால் நேற்று மும்பை கலினா பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது .